சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 15 பேர் பலி, 44 பேர் காயம்
கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும்.


சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 15 பேர் தீயில் கருகிப் பலியாகினர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் 15 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 44-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் முதல் தளத்தில் மின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்ததுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும். கடந்த ஜனவரி 24 அன்று கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஜின்யு நகரில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...