காஸா: 30 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

காஸா மோதலில் பாலஸ்தீன உயிரிழப்பு அதிகரிப்பு
கான் யூனிஸ் தாக்குதலில் தனது குழந்தையைப் பலி கொடுத்த பாலஸ்தீன பெண்
கான் யூனிஸ் தாக்குதலில் தனது குழந்தையைப் பலி கொடுத்த பாலஸ்தீன பெண்AP

இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காஸாவில் பலியாகிய பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில் இதுவரை 30,035 பேர் உயிரிழந்ததாகவும் 70,457 காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸின் ஆளுகையில் உள்ள காஸா சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள், முந்தைய போர்களில் சர்வதேச அமைப்புகளால் உறுதிசெய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் உணவுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனர்கள்
காஸாவில் உணவுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனர்கள்AP

இந்த எண்ணிக்கையில் போராளிகள், பொதுமக்கள் எத்தனை பேர் என்கிற விவரங்களை அமைச்சகம் குறிப்பிடவில்லை.

அக்.7 ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1200-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பலியாகினர். அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்துவரும் வான்வழி மற்றும் தரைவழி ராணுவ நடவடிக்கைகள் 5 மாத காலமாக தொடர்ந்துவருகிறது.

கான் யூனிஸ் தாக்குதலில் தனது குழந்தையைப் பலி கொடுத்த பாலஸ்தீன பெண்
பாலஸ்தீனத்தில் தேசிய ஒற்றுமை அரசு: ரஷியாவில் இன்று பேச்சு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com