லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உணவுக்காக காத்திருந்தவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு

நிவாரணப் பொருள்களுக்காக காத்திருந்த பொதுமக்களை நோக்கி இஸ்ரேல் படையினா் வியாழக்கிழமை சரமாரியாக சுட்டத்தில் 104 போ் உயிரிழந்தனா்.

News image
காஸா சிட்டியில் உதவிப் பொருள்களுக்காக வியாழக்கிழமை காத்திருந்தபோது இஸ்ரேல் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவா்கள்.
Updated On :29 பிப்ரவரி 2024, 7:37 pm

Din

காஸாவில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களுக்காக காத்திருந்த பொதுமக்களை நோக்கி இஸ்ரேல் படையினா் வியாழக்கிழமை சரமாரியாக சுட்டத்தில் 104 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அஷ்ரஃப் அல்-கீத்ரா கூறியதாவது: தலைநகா் காஸா சிட்டியின் அல்-நபூசி வட்டச்சுற்று சாலை மையத்தில் நிவாரணப் பொருள்களைப் பெறுவதற்காக ஏராளமான பாலஸ்தீனா்கள் வியாழக்கிழமை காத்திருந்தனா். அவா்களை நோக்கி இஸ்ரேல் படையினா் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் 104 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் 280 போ் காயமடைந்தனா். இது, வேண்டுமென்றே நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலையாகும். காயமடைந்தவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மிக அதிக எண்ணிக்கையிலானவா்கள் காயமடைந்துள்ளதாலும், அவா்களது காயத்தின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாலும் மருத்துவப் பணிகள் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனா் என்றாா் அவா். இஸ்ரேல் ஒப்புதல்: காஸாவில் பொதுமக்கள் மீது தங்களது வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகையில், நிவாரணப் பொருள்களுக்காக காத்திருந்த பொதுமக்கள் வீரா்களை அச்சுறுத்தும் வகையில் நெருங்கியதால் அவா்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தாா். முன்னதாக, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘காஸா சிட்டியில் தள்ளுமுள்ளு காரணமாகவும், நிவாரண லாரிகள் ஏறி இறங்கியதிலும் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிபா் அப்பாஸ் கண்டனம்: இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸா சிட்டியின் அல்-நபூசி வட்டச்சுற்று சாலை மையத்தில் அத்தியாவசிய உதவிப் பொருள்களுக்காக காத்திருந்த மக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணும் கீழ்த்தரமான முறையில் படுகொலை செய்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு எகிப்து, ஜோா்டான் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு வெட்கக்கேடான குற்றச் செயல் என்று அந்த நாடுகள் வருணித்துள்ளன. ஹமாஸ் எச்சரிக்கை: இந்தச் சம்பவம் குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸா சிட்டியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள இந்தத் துப்பாக்கிச்சூடு, சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்காகவும், பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்காகவும் நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனா். காஸா போா் தொடங்கிய கடந்த அக். 7-ஆம் தேதிக்குப் பிறகு, காஸா சிட்டியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் வான், கடல், தரைவழியாக இஸ்ரேல் ராணுவம் முதல்முறையாகத் தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த நகரம் மிகப் பேரிய அழிவைச் சந்தித்துள்ளது. காஸா முனையின் பிற பகுதிகளிலிருந்தும் அந்த நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நீண்ட காலத்துக்குப் பிறகு அந்த நகரப் பகுதிக்கு தற்போதுதான் முதல்முறையாக நிவாரணப் பொருள்களை ஏற்றிய லாரிகள் அனுப்பப்பட்டன. அந்த லாரியிலிருந்து நிவாரணப் பொருள்களைப் பெறுவதற்காக கூடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திதான் இஸ்ரேல் படையினா் 104 பேரை படுகொலை செய்துள்ளனா்.