ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜப்பானில் தொடர்ந்து நிலநடுக்கம்.. 20 முறைக்கு மேல் குலுங்கியது

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவான நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:43 am

DIN


ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவான நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானின் கடற்கரையோர நகரங்களான இஷிக்வா, நிகாடா, டொயாமா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கடற்பகுதிகளில் மிக மோசமான சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒருசில பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி மாலை 4.21 மணி நிலப்படி, முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதும் இஷிக்வா பகுதியில் உள்ள வஜிமா துறைமுகப் பகுதியை முதல் சுனாமி அலை தாக்கியது. இது 4 அடி உயரம் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜப்பானில், காலை 7 மணி முதல், தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருவதாகவும்,  ரிக்டர் அளவில் 4 புள்ளிகளுக்கு மேல் ஏற்பட் நிலநடுக்கம் 20 முறை பதிவாகியிருப்பதாகவும், ரிக்டர் அளவில் 5 புள்ளிகளுக்கு மேல் 7 முறை நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர் நிலநடுக்கம் காரணமாக தீவிபத்துகள், நிலச்சரிவு உள்ளிட்ட ஆபத்துகள் நேரிடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஹோகுரிகு பகுதியில் சுமார் 36 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியிருக்கிறது.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஜப்பான் தலைமை அமைச்சரவை செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.
 

நிலநடுக்கத்தால் ஏராளமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், வஜிமா பகுதியில் பல இடங்களில் புகை சூழ்ந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் பெரிய பெரிய விரிசல்கள் காணப்படுகின்றன. பொதுவிடத்தில் மக்கள் ஒன்றுகூடியிருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

புல்லட் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மிக முக்கிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விரிசல் காணமாக போக்குவரத்தும் முடங்கியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.