ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 10-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
ஹோன்ஷு அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


