சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக சர்வதேச நீதி மன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது.
சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக குற்றம் சாட்டிய தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் காஸா மீதான தாக்குதல்களை நிறுத்த ஆணை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தது.
'அக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை அரசியல் மற்றும் சட்டத்தைக் கொண்டு மறைக்கும் முயற்சி இது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித்தொடர்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் துணைத் தலைவர் பலி!
தென்னாப்பிரிக்காவின் இந்த அபத்தமான குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்க்கவிருப்பதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
'காஸாவின் மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகளுக்கு ஒளிந்திருக்கும் ஹமாஸ் அமைப்பு மட்டுமே இந்த போருக்கு முழு பொறுப்பு' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 11 மற்றும் 12-ல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் இதுவரை 22,000த்திற்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

செங்கல்பட்டில் ஆக. 14ல் உள்ளூர் விடுமுறை!

தடை தாண்டுதல்: இறுதிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை!
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK


