அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம்: இந்தியா

ஈரானில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது. 
ஈரான் தாக்குதலில் பலியானவர்கள்!
ஈரான் தாக்குதலில் பலியானவர்கள்!

ஈரானில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜைஸ்வால் தெரிவித்துள்ளார்.  

எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், 'ஈரான் வெடிக்குண்டுத் தாக்குதலை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் ஈரான் மக்களுக்கும் அரசுக்கும் ஆதரவாக இருப்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார். 

மேலும், 'உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்காகவும், காயப்பட்டோருக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்' எனவும் தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் அமிராப்துல்லாஹியான் தெரிவித்துள்ளார். 

ஈரானின் துணை ராணுவத்தின் அதிரடி சிறப்புக்குழுவின் தளபதி காசிம் சுலைமான், அமெரிக்கா ஆளில்லா விமானத்தால் கடந்த 2020-ல் கொல்லப்பட்டார். அவரது நான்காவது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com