வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது காஸா! : ஐநா அதிகாரி

மனிதத்துவத்தின் மிக மோசமான நிலையை காஸா சந்தித்து வருகிறது.
மத்திய காஸாவில் இருந்து இடம்பெயரும் பாலஸ்தீனர்கள் | AP
மத்திய காஸாவில் இருந்து இடம்பெயரும் பாலஸ்தீனர்கள் | AP

ஐக்கிய நாடுகள் அவையின் மனிதநேய தலைவர், காஸா- வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளதாகவும் பொது சுகாதார பேரழிவு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்டின் கிரிஃபித்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தாவது:

பாலஸ்தீனர்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் இதுவரை எங்குமே பதிவு செய்யப்படாத பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் இத்தனை இடர்களைச் சந்தித்து வருகின்றனர். உலகம் அதனை பார்த்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்ட வீடு | AP
இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்ட வீடு | AP

ஐ.நா மனிதத்துவ விவகார பிரிவின் தலைவர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பலியாவது குறித்தும் திறந்தவெளியில் மாறுபாடுகளுடனான வெப்பநிலையில் மக்கள் தங்கியிருப்பது குறித்தும் தனது கவலையை வெளிபடுத்தியுள்ளார்.

குறைவான மருத்துவமனைகளே செயல்பாட்டில் உள்ளன. தொற்று வியாதிகள் பரவியுள்ளன. மருந்து பொருள்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையில் 180 குழந்தைகள் புதிதாகப் பிறக்கின்றன என்பதைக் குறிப்பிட்ட அவர், ஐ.நா உடனடி போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான நேரம் இது என வலியுறுத்தியுள்ளார்.

மனிதத்துவத்தின் மிக மோசமான நிலையை காஸா சந்தித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com