கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போரை உடனடியாக நிறுத்த சீனா வலியுறுத்தல்!

இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையே நடந்துவரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜனவரி 2024, 10:21 am

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் மூன்றாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், உடனடியாக போரை நிறுத்துமாறு இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது. 

பெயிஜ்ங்கின் வெளியுறவுத்துறை அமைச்சகம் விரிவான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்தைக் கொண்டுவருமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஹமாஸுடனான சண்டையில் காஸா மக்களைத் தண்டிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. போரை நிறுத்தி ஐ.நா அளிக்கும் தீர்மானங்களை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கடைபிடித்து இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. 

கடந்த நவம்பரில் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைக்கு தீர்வுகாண இரு மாநிலத் தீர்வுக்கான வரைபடங்களையும் அட்டவணைகளையும் வகுக்க பாதுகாப்பு கவுன்சிலுக்கு சீனா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

அக்டோபர் 7 தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் தொடர் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுவருகிறது. இதுவரை 23,210-த்திற்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.