ஏறத்தாழ 2.1 கோடி அமெரிக்க குழந்தைகள் 2024-ஆம் ஆண்டில் அரசின் புதிய திட்டத்தால் பயன்பெறுவார்கள் என அந்த நாட்டின் வேளாண் துறை செயலர் டாம் வில்சாக் தெரிவித்துள்ளார்.
கோடைக்காலத்தில் அமெரிக்க குழந்தைகள் எதிர்கொள்ளும் உணவு பற்றாக்குறையைச் சமாளிக்க குழந்தைகள் உள்ள அமெரிக்க குடும்பங்களுக்கு மாதந்தோறும், அமெரிக்க அரசு மின்னணு முறையில் தொகை வழங்கும்.
அமெரிக்கர்கள் அந்த அட்டையை உபயோகித்து கடைகளில் உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்ள இயலும்.
இந்தத் திட்டம் டிச.2022-ல் அறிவிக்கப்பட்டது. தற்போது சோதனைக்குப் பிறகு 2024 முதல் நிரந்தரமாக தொடங்கப்பட்டுள்ளது. 35 மாகாணங்கள் மற்றும் 4 பழங்குடி சமூகம் இதில் இணைந்துள்ளன.
கோடைக்காலத்தில் மூன்று மாதங்கள் மாதமொன்று 40 டாலர்கள் வீதம் குடும்பங்களுக்கு இபிடி அட்டையில் மொத்தமாக 120 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.
”இந்த நாட்டில் பசியோடு ஒரு குழந்தையும் இருக்கக் கூடாது. பள்ளிகளில் சத்து நிறைந்த உணவுக்கான வாய்ப்பு விடுமுறைகளில் இல்லாமல் போகும். அதனால் அவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார் டாம்.
இந்தத் திட்டத்திற்கு அமெரிக்க அரசு. 2024-ல் 2.5 பில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


