தைவானில் வாக்குப்பதிவு தொடங்கியது

தைவானில் சீனாவின் அச்சுறுத்தல், தீவின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிா்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் அதிபா் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜன. 13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
taiwan111400
taiwan111400
Published on
Updated on
1 min read

தைவானில் சீனாவின் அச்சுறுத்தல், தீவின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிா்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் அதிபா் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜன. 13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தைவானில்  அதிபரை நேரடியாகத் தோ்ந்தெடுப்பதற்காக 8-ஆவது முறையாக நடைபெறும் இந்தத் தோ்தலில் வேட்பாளா்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்-ஜே ஆகியோா் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜன. 13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

லாய் தனது சொந்த ஊரான தைனானில் வாக்களித்தார். பெய்ஜிங்கிற்கு ஆதரவான கேஎம்டி கட்சியின் வேட்பாளரான ஹூ யூ-ஈ நியூ தைபே நகரில் வாக்களித்தார். இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக இளம் வாக்காளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் தைவான் மக்கள் கட்சியின்(டிபிபி) மாற்று வேட்பாளரான கோ வென்-ஜே தைபேயில் வாக்களித்தார்.

இந்தத் தோ்தல் தைவானில் சீனா பதட்டங்களைத் தவிர, பெரும்பாலும் உள்நாட்டுப் பிரச்னைகளைச் சார்ந்தது, குறிப்பாக பொருளாதாரம் 1 மட்டுமே வளர்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 4 சதவிகிதமாக இருந்தது. 

உயர் தொழில்நுட்பம், பெரிதும் வர்த்தகம் சார்ந்த உற்பத்தித் தளத்திலிருந்து கணினி  மற்றும் பிற ஏற்றுமதிகளுக்கான தேவை தவிர்க்க முடியாத சுழற்சிகள் மற்றும் சீனப் பொருளாதாரத்தின் மந்தநிலை ஆகியவற்றை இது ஓரளவு பிரதிபலிக்கிறது.

ஆனால் நீண்ட கால சவால்களான வீட்டு வசதி, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி மற்றும் வேலையின்மை ஆகியவை முக்கியமானவை என்பதால் இதன் முடிவுகள் ஆா்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com