கடலில் ஏவப்பட்ட கணை: வடகொரியாவின் திட்டம் என்ன?

வடகொரியா, தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் தேர்தலையொட்டி போர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் | AP
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் | AP

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை கடலை நோக்கி அனுப்பியுள்ளது. இந்தாண்டின் முதல் ஏவுகணைத் தாக்குதல் இது.

தென்கொரியா மற்றும் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் தேர்தலை முன்னிட்டு வடகொரியா போர் நடவடிக்கைகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரியாவின் ராணுவ அதிகாரிகள், கண்டறிய இயலாத பாலிஸ்ட்டிக் ஏவுகணை, வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்கள் தெரிவிக்கவில்லை.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரவை, ஏவுகணை அனுப்பபட்டதை உறுதி செய்துள்ளது. மேலும் அது கடலில் விழுந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் வடகொரியா ஏவும் முதல் தாக்குதல் இது. கடந்த முறை டிச.18 வடகொரியா, ஏவுகணை சோதனையை பொதுவில் நடத்தியது. ஹவசாங் 18 என்று பெயரிடப்பட்ட ஏவுகணை அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டது.

சமீப நாள்களில் வடகொரியா தனது எதிரி நாடுகளைத் தூண்டும்வகையில் பேசிவருகிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், கடந்த வாரம் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆலையைப் பார்வையிட சென்றார். தென்கொரியாவை முதன்மை எதிரியென்றும் தூண்டினால் அழித்துவிடுவோம் எனவும் தெரிவித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com