விபத்துக்குள்ளான விமானம்: தேடுதல் பணியில் மீட்புக் குழு

விபத்துக்குள்ளான விமானத்தைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்துக்குள்ளான விமானம்: தேடுதல் பணியில் மீட்புக் குழு

பசுபிக் பெருங்கடல் அருகே விபத்துக்குள்ளான விமானத்தைத் தேடும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹாப் மூன் விரிகுரா அருகே விமானம் ஞாயிற்றுக்கிழமை  இரவு 7.15-க்கு விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து சில மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தப் பகுதி சான் பிரான்சிஸ்கோவில் தெற்கில் உள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளதாக சான் மேடியோ பகுதியின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்தவர்கள் குறித்து விபரங்களோ அது என்ன வகையான விமானம் என்பது பற்றியோ உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com