ஆப்பிளுக்குப்பின் இந்த தொழில்நுட்பம்தான் அதிகமாக கவர்கிறது: சத்ய நடெல்லா!

ஆப்பிள் செல்போன் அறிமுக நிகழ்ச்சிக்குப் பின் இந்தத் தொழில்நுட்பத்தின் அறிமுகம்தான் என்னை அதிகமாகக் கவர்ந்தது என மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நடெல்லா தெரிவித்துள்ளார். 
sathyanathella
sathyanathella

மைக்ரோசாப்ட் நிறுவனரான சத்திய நடெல்லா முதன்முதலில் ஆப்பிள் அறிமுகமானபோது இருந்த கவனத்தையும் கவர்ந்திழுக்கும் திறனையும் கொண்ட ஒரு தொழில்நுட்பமாக 'ராபிட்' உள்ளது எனப் புகழ்ந்துள்ளார்.  

டாவோஸ் 2024 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சத்ய நடெல்லா புதிதாக அறிமுகமாகியுள்ள ராபிட் தொழில்நுட்பத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். "ராபிட் ஓஸ்-ன் அறிமுகம் முகவும் பிரமாதமாக இருந்தது. 2007-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் செல்போன்களை அறிமுகப்படுத்திய நிகழ்வில் இருந்த கவர்ச்சியும் கவனமும் இந்த தொழில்நுட்பத்தின் அறிமுகத்தில் எனக்குக் கிடைத்தது" எனப் புகழ்ந்துள்ளார். 

வளர்ந்துவரும் செய்யறிவு மற்றும் இதர தொழில்நுட்பங்களைப் பற்றி பேசிய அவர், மற்றவைகளை விட 'ராபிட் ஓஎஸ்'தான் எதிர்காலத்தினரால் அதிகம் விரும்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

லாஸ் வேகாசில் நடைபெற்ற நுகர்வோர் மின்சாதனக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ராபிட் தொழில்நுட்பம் அதிக அளவு வரவேற்பினைப் பெற்றது. அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ராபிட் இன்க். நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com