இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரில் காஸா மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்துவரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.
இஸ்ரேலில் பணிபுரிந்த பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இஸ்ரேல் அரசே பாலஸ்தீனர்களை பணியமர்த்த தடை விதித்தது. அவர்களின் பணியாளர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் இஸ்ரேல் நிறுவனங்கள் பலவற்றில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கட்டுமானப் பணிகளுக்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதல்!
கடந்த அக்டோபர் மாதம் தெல் அவிவில் உள்ள பல கட்டுமான நிறுவனங்கள், இஸ்ரேல் அரசிடம் 1 லட்சம் இந்தியர்களைப் பணியமர்த்த அனுமதி கோரியிருந்தன. அதனடிப்படையில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகள் செய்த விளம்பரத்தினால், 20,000 பணியிடங்கள் இந்தியர்களால் நிரப்பப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.