இஸ்ரேலின் இரக்கமற்ற தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துவரும் நிலையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரமான தாக்குதலை நடத்தியுள்ளது.
போர் துவங்கியதிலிருந்து ஹமாஸ் அமைப்பினரின் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. 'மத்திய காஸாவில் நடந்த இந்த தாக்குதலில் 20க்கும் அதிகமான வீரர்களை நாங்கள் இழந்திருக்கிறோம்' என இஸ்ரேல் ராணுவத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாலஸ்தீன தேசம் அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்கமாட்டோம்!
இஸ்ரேல் பீரங்கியின் மீது ஒரு ஆர்பிஜி ரக ஏவுகணை பாய்ந்தது. அதே நேரத்தில் அருகிலிருந்த இரண்டு கட்டிடங்கள் மற்றொரு குண்டுவெடிப்பால் சரிந்து விழத்துவங்கியுள்ளன. இதனால் கட்டிடத்திற்கு உள்ளும் அருகிலும் இருந்த வீரர்கள் பலியாகியுள்ளனர்.
அந்த இரண்டு கட்டிடங்களையும் தகர்ப்பதற்காக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்ணிவெடிகளையும், வெடிபொருள்களையும் தயார் செய்துகொண்டிருக்கும்போது, ஹமாஸ் நடத்திய தாக்குதல்களால் அவையும் வெடித்துள்ளன. இதனால் பெரும் இழப்பை இஸ்ரேல் ராணுவம் சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் இதுவரை 25,295 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.