சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பின்லாந்தில் அதிபர் தேர்தல்!

ஐரோப்பிய தேசமான பின்லாந்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று(ஜன.28) நடைபெறுகிறது.

பின்லாந்தில் நடைபெறும் வாக்குப்பதிவு |படம் - AP

Published On :

ஹெல்சின்கி : ஐரோப்பிய தேசமான பின்லாந்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று(ஜன.28) நடைபெறுகிறது.

பின்லாந்தின் தற்போதைய அதிபர் சௌலி நீநிஸ்டோவின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன்  முடிவடைகிறது. இந்நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தலில் சுமார் 4.50 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது.  

அதிபர் தேர்தலில், 9 வேட்பாளர்கள் களம் காணும் சூழலில், எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலே உள்ளதாக அங்குள்ள கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், முன்னாள் பிரதமர் அலெக்சாண்டர் ஸ்டப்(55) மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ(65) ஆகியோர் முன்னணி பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

செவ்வாயன்று(ஜன.30) முதற்சுற்று வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகவுள்ளன. அதில் அதிக வாக்குகள் பெறும் 2 வேட்பாளர்கள் இடையே, பிப்ரவரி 11-ஆம் தேதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். அதில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்து கடந்த ஏப்ரலில், நேட்டோ உறுப்பினராகியிருப்பதன் மூலம் ரஷ்யாவின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பின்லாந்து அதிபர் பதவி அதிகாரமிக்க பதவியாக உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கும் அதிகாரம் பின்லாந்து அதிபருக்கு உண்டு. ஆகவே இந்த அதிபர் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.