போரில் காஸாவின் தற்போதைய நிலை!
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் இனப்படுகொலை குற்றங்களை உடனே நிறுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ள நிலையில், காஸாவின் தற்போதைய நிலை என்ன?


இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையேயான போரில், காஸா சிதையுண்டுபோயுள்ளது. 22,0000-த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையானவர்களின் எண்ணிக்கை தினமும் கூடிக்கொண்டேயிருக்கிறது.
உயிரிழந்தோரில் 11,000-த்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகள், 7,500க்கும் மேற்பட்டோர் பெண்கள். இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 165 பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பின்லாந்தில் அதிபர் தேர்தல்!
பிணைக்கைதிகள் 100 பேரை விடுவித்தால் 2 மாதங்களுக்கு போரைத் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் ஒத்துக்கொள்வதாகவும், ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தத்தில் ஆர்வம் காட்டாததாகக் கூறப்படுகிறது. காஸாவில் போர் முடிவுக்கு வந்தபின்னர் காஸாவை இஸ்ரேல் ராணுவம் நிர்வாகம் செய்யும் என இஸ்ரேலின் நிதியமைச்சர் பேசலேல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7ல் இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன அகதிகள் நிறுவனமான UNRWA-ன் பணியாளர்களுக்கு தொடர்புள்ளதாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் அந்த அகதிகள் நிறுவனத்திற்கு அளிக்கும் நிதியை நிறுத்தவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...