2 மாதங்கள் போர் நிறுத்தம், 100 கைதிகள் விடுவிப்பு... நிறைவேறுமா பேச்சுவார்த்தை?

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில்  முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் நிறைவேறினால் இரண்டு மாத காலத்திற்கு போர் நடவடிக்கைகளை நிறுத்தப்படும்.
பிணைக்கைதிகளை விடுவிக்க கோரிய இஸ்ரேலியர்களின் போராட்டம் | AP
பிணைக்கைதிகளை விடுவிக்க கோரிய இஸ்ரேலியர்களின் போராட்டம் | AP

இஸ்ரேல்- ஹமாஸ் இருதரப்புக்குமிடையே இருமாத காலத்துக்கான போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தம் முன்னேற்ற பாதையில் உள்ளது. 

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்துவரும் இந்த பேச்சுவார்த்தை. இரண்டு கட்டங்களாக முடிவு செய்யப்படலாம் என அசோசியேடட் பிரஸுக்கு அளித்த தகவலில், அடையாளம் வெளியிட விரும்பாத உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டத்தில், இஸ்ரேல் தரப்பில் போர் 30 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். அக்.7 தாக்குதலில் ஹமாஸ் கடத்திச் சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ள 100-க்கும் மேற்பட்டவர்களில் பெண்கள், மூத்தோர் மற்றும் காயம்பட்டவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.

இந்த முதல் கட்ட இடைவெளியில் அடுத்து கட்டமாக ராணுவ வீரர்கள் மற்றும் ஆண்களை விடுவிக்க தேவையான கோரிக்கைகள் பரிமாறிக்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போர் நிறுத்தம் காஸாவின் மக்களுக்கும் போதுமான வாழ்வாதார உதவிகள் கிடைக்க செய்யும்.

இந்த ஒப்பந்ததுக்கான முன்னெடுப்பு போரை நிறுத்தாது என்றபோதும் நான்கு மாதமாக தொடர்ந்துவரும் பதட்டத்தைத் தணித்து தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவகாசம் அளிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com