கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மருத்துவமனையில் அத்துமீறிய இஸ்ரேல்: 3 பேர் பலி

மருத்துவமனைகளைப் பதுங்குமிடங்களாக ஹமாஸ் பயன்படுத்திவருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

News image

மருத்துவமனை தாக்குதலில் பலியானவரின் உறவினர்கள் | AP

Updated On :30 ஜனவரி 2024, 10:28 am

DIN

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீனர் மூவர் பலியாகினர்.

ஜெனின் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஐபிஎன் ஷினா மருத்துவமனையில் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததாகவும் ஹமாஸ் பிரிவைச் சேர்ந்த மூவரைச் சுட்டு கொன்றதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையைப் பதுங்குமிடமாக அவர்கள் பயன்படுத்தியதாகவும் அவர்களில் ஒருவர் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஐபிஎன் மருத்துவமனை | AP

ஐபிஎன் மருத்துவமனை | AP

பாலஸ்தீன சுகாதார அமைச்சகம், இஸ்ரேல் படைகள் மருத்துவமனையின் சிகிச்சை பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவதை நிறுத்த வலியுறுத்துமாறு பன்னாட்டு அமைப்புகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.

போர் தொடங்கியது முதலே மேற்கு கரை பகுதியில் வன்முறை காணப்படுகிறது. இஸ்ரேல் அங்குள்ள பாலஸ்தீனர்களிடம் விசாரணை நடத்துவதும் சோதனையிடுவதுமாக செயல்பட்டு வருகிறது. அதனால் மோதல் போக்கு நீடிக்கிறது. 380 பாலஸ்தீனர்கள் இதுவரை பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.