பாடகி டீப் ஃபேக் விவகாரம்: இயல்புக்கு திரும்பிய எக்ஸ் தேடல்

அமெரிக்க பாடகியின் டீப் ஃபேக் ஆபாச படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் குறித்த தேடலைத் தடை செய்தது எக்ஸ் சமூக வலைதளம்.
டெய்லர் ஸ்விப்ட் | AP
டெய்லர் ஸ்விப்ட் | AP

டெய்லர் ஸ்விப்ட் குறித்த தேடல் வசதி மீண்டும் இயல்புக்கு மாற்றியமைக்கப்பட்டதாக எக்ஸ் சமூக வலைதளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாப் பாடகியான டெய்லர் ஸ்விப்டின் டீப் ஃபேக் தொழில்நுட்பம் கொண்டு ஆபாசமாக உருவாக்கப்பட்ட படங்கள் எக்ஸ் தளத்தில் வைரலானது. இதனை கட்டுப்படுத்த அவர் குறித்த தேடல் முடிவுகளை தடை செய்தது எக்ஸ் தளம்.

டெய்லர் ஸ்விப்ட் குறித்து ட்விட்டரில் தேடுபவர்களுக்கு,  “இது  உங்கள் தவறல்ல- வருந்த வேண்டாம்” என்கிற செய்தி ‘மீண்டும் தேடுங்கள்’ என்பதுடன் இணைத்து காண்பிக்கப்பட்டது.

எக்ஸ் தளத்தில் டெய்லர் ஸ்விப்ட் தேடல் முடிவு | AP
எக்ஸ் தளத்தில் டெய்லர் ஸ்விப்ட் தேடல் முடிவு | AP

இந்த நிலையில்,  “தேடல் மீண்டும் செயல்பாட்டில் உள்ளது. எங்களது கண்காணிப்பைத் தொடரவுள்ளோம். அதுபோன்ற படங்கள் பகிரப்பட்டால் அதனை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எக்ஸ் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் பிரிவு தலைவர் ஜோ பெனாரோச் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும்  ‘டெய்லர் ஸ்விப்ட் ஏஐ’ என்கிற தேடல் உள்ளீடு இன்னும் தடையில் உள்ளது.

ஸ்விப்டின் ரசிகர்கள் அவரது பொய்யான படம் வைரலானபோது அவருக்கு ஆதரவாக திரண்டு  ‘ப்ரொடெக்ட் டெய்லர் ஸ்விப்ட்’ (டெய்லர் ஸ்விப்படைக் காப்போம்) என்கிற குறிச்சொல்லோடு அவரது நேர்மறையான படங்களைப் பகிரத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com