கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போர் நிறுத்த பேச்சுவார்த்தை: தூதுக்குழு அனுப்ப இஸ்ரேல் முடிவு!

போர் நிறுத்தம்: இஸ்ரேல் தூதுக்குழு அனுப்ப முடிவு!

News image

மேற்குக் கரையில் பலியான 15 வயது சிறுவனுக்காக கண்ணீர் சிந்தும் உறவினர்கள் - ஏபி

Updated On :4 ஜூலை 2024, 4:11 pm

காஸா போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் பிணைக்கைதிகள் விடுதலை குறித்து ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் சார்பில் தூதுக்குழு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்கா தலைமையில் மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பதிலை இஸ்ரேலுக்கு அளித்ததையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. எகிப்து அல்லது கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.

ஆரம்பகட்ட ஆலோசனைக்கு பிறகு பிரதமர் தூதுக்குழு அனுப்ப ஒத்துக்கொண்டதாக அதிகாரிகள் - பெயர் வெளியிடாதவாறு கேட்டுக்கொண்டு - தெரிவித்துள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

இஸ்ரேலின் இலக்குகள் எட்டப்பட்ட பிறகே போர் நிறுத்தம் நடக்கும் என இஸ்ரேல் தொடர்ந்து தெரிவித்துவருகிறது.

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியதுமுதல் ஹமாஸின் தரப்பில் சாதகமான பதில் பெறப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் பேசியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களின் மீதான வன்முறையை நிறுத்த சில யோசனைகளை மத்தியஸ்தம் மேற்கொள்ளும் சகோதர நாடுகளுக்கு தெரிவித்ததாக ஹமாஸ் புதன்கிழமை கூறியது.

9 மாதங்களாக தொடரும் போரில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தை பதற்றமான சூழலில் இருந்து சிறிது ஆறுதல் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.