கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தோனேசிய தங்கச் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்பு

News image

உயிரிழந்த ஒருவரின் உடலை ஏந்திச் செல்லும் மீட்புப் பணியினர் - AFP

Updated On :9 ஜூலை 2024, 11:55 am

பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின்போது தங்கச் சுரங்கத்தில் பணியாற்றி வந்தவர்களில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகவும் 30 பேர் காணாமல் போனதாகவும் செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போன் பொலாங்கோ பகுதியில் உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை 9 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஏற்கெனவே 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மொத்தமாக பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கூடுதலாக 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததாக கூறப்படுகிறது.

கிழக்கு சுவாவா மாவட்டத்தில் உள்ள போன் பொலாங்கோவில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் கடும்மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றிய பலர் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை 46 பேர் தப்பியதாக பதிவு செய்யப்பட்டதை அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும், 51 பேர் மாயமானதாக அப்போதைய தகவல்கள் தெரிவித்தன.

மீட்புப் பணிகள் தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.