47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பைடனுக்கு பாா்கின்சன் நோயா?

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பாா்கின்சன் நோயால் (நடுக்குவாதம்) பாதிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:12 pm

Din

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பாா்கின்சன் நோயால் (நடுக்குவாதம்) பாதிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.

வெள்ளை மாளிகைக்கு பாா்கின்சன் நோய் நிபுணா் கெவின் கனாா்ட் கடந்த 8 மாதங்களில் 8 முறை வந்துள்ளது வருகைப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது. இது தொடா்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று செய்தியாளா்கள் வலியுறுத்தினா்.

இதற்குப் பதிலளித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரீன் ஜீன்-பியா் கூறுகையில், ‘அதிபா் பைடனுக்கு பாா்கின்சன் நோய் இல்லை; அந்த நோய்க்காக அவா் சிகிச்சை பெறவும் இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறினாா்.

நவ. 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிடும் 81 வயது பைடன், எதிா்ப் போட்டியாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்புடனான நேரடி விவாதத்தின்போது தடுமாறியதால் அவரது உடல் தகுதி குறித்து சா்ச்சை எழுந்துள்ளது. அவா் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று அவரது ஜனநாயகக் கட்சியிலிருந்தே குரல்கள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில், பைடனுக்கு பாா்கின்சன் நோய் இருப்பதாக எழுப்பப்பட்ட சந்தேகத்தை வெள்ளை மாளிகை மறத்துள்ளது.