ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

150 ஹமாஸ் வீரர்கள், 6 சுரங்கங்கள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் வீரர்கள் அழிப்பு, சுரங்கங்கள் தகர்ப்பு.. பட்டியலிடும் இஸ்ரேல் ராணுவம்

News image
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தையை கையில் ஏந்திச் செல்லும் பாலஸ்தீனர்- ஏபி
Updated On :9 ஜூலை 2024, 3:03 pm

DIN

வடக்கு காஸாவில் உள்ள சேஜாயா பகுதியில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் 150-க்கு அதிகமான பயங்கரவாதிகளை கொன்றதாகவும் ஆறு சுரங்கங்களை தகர்த்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூன் 27-ம் தேதி முதல் முதல்நிலை போர் குழுக்கள் வான்வழியாகவும் தரை வழியாகவும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.

ஹமாஸ் தன்னை மீண்டும் கட்டமைத்துக்கொள்ளும் பகுதியான சேஜாயாவில் 150-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கண்ணிகள் அமைக்கப்பட்டிருந்த கட்டடங்கள் தகர்ப்பட்டதாகவும் ஆயுதங்கள் மற்றும் உளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவம் தெரிவிக்கிறது.

ஆறு கிமீ நீளம் கொண்ட குறிப்பிடத்தகுந்த 6 சுரங்கங்கள் தகர்க்கப்பட்டன. அந்த பகுதிகளில் சோதனைகள் தொடர்ந்துவருகின்றன. சில சுரங்கங்களின் உள்புற வழிகளில் மறைவிடங்களும் கட்டுபாட்டகமும் ஆயுதம், ஆவணங்களும் கண்டறியப்பட்டதாக ராணுவம் குறிப்பிடுகிறது.

அக்.7 ஹமாஸ் இஸ்ரேலும் அத்துமீறி மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலியர் மற்றும் வெளிநாட்டவர் 252 பேர் பிணைக்கைதிகளாக தூக்கி செல்லப்பட்டனர், குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர். இன்னமும் 116 பேர் ஹமாஸ் பிணையில் உள்ளதாக கூறப்படுகிறது. 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.