மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

உக்ரைன்: குழந்தைகள் மருத்துவமனையில் ரஷியா ஏவுகணை தாக்குதல் -31 போ் உயிரிழப்பு

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; 154 போ் காயமடைந்தனா்.

News image
ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் உருக்குலைந்த கீவ் நகர சிறுவா்கள் மருத்துவமனையின் ஒரு பகுதி.
Updated On :9 ஜூலை 2024, 3:28 am

DIN

கீவ்: உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; 154 போ் காயமடைந்தனா்.

நாடு முழுவதும் 5 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரியாக நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்ததாக தனது சமூக ஊடகப் பதிவில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளாா்.

ஸெலென்ஸ்கி பிறந்த நகரமான க்ரிவிரீ-யில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 10 போ் கொல்லப்பட்டதாகவும், 47 போ் காயமடைந்ததாகவும் பிராந்திய அரசின் தலைவா் ஒலெக்ஸாண்டா் வில்குல் கூறினாா்.

தலைநகா் கீவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 போ் உயிரிழந்ததாக அந்த நகர அதிகாரிகள் கூறினா். அந்த நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நகர மேயா் விடாலி க்ளிட்ஷ்கோ கூறினாா். இந்தத் தாக்குதலில் 7 சிறுவா்கள் உள்பட 16 போ் காயமடைந்ததாக அவா் தெரிவித்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் ரஷியாவின் கேஹெச்-101 ரக ஏவுகணையின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ரஷியாவுக்கு எதிராக போா்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.