டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாகிஸ்தான் தரையிறங்கிய விமானத்தில் தீ: பயணிகள் அவசர வெளியேற்றம்

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தீ: பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிர் தப்பினர்

News image
Updated On :11 ஜூலை 2024, 11:29 pm

Din

பாகிஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பிடித்ததால் அதிலிருந்த அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.

அந்த நாட்டின் பெஷாவா் நகரிலுள்ள விமான நிலையத்தில் சவூதி ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் வியாழக்கிழமை தரையிறங்கியது. அப்போது, அதனை தரையிறக்கும் சக்கரப் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அதிலிருந்து புகையும் தீப்பொறிகளும் வெளியேறுவதைக் கவனித்த நிலைய அதிகாரிகள், தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனா்.

அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் விமானத்திலிருந்த 276 பயணிகள், 21 பணியாளா்களை அவசரமாக வெளியேற்றினா். தீயும் முற்றிலுமாக அணைக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினா்.