பிரபல கடத்தல் மன்னன் சிக்கியது எப்படி..?
போதைப்பொருள் கடத்தல் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாத்திவர் கைது


பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ரொனால்ட் ரோலண்ட் பிடிபட்டார்.
முன்னாள் விமானியாக இருந்த ரொனால்ட் ரோலண்ட், போதைப்பொருள் கடத்தியதற்காக கடந்த சில ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், ரொனால்ட் கடந்த வாரத்தில் தனது மனைவியுடன் பிரேசிலில் உள்ள குவாருஜாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு, அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படத்தினை, ரொனால்டின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து ரொனால்டை தேடிவந்த காவல்துறையினர், அவரது மனைவியின் சமூக ஊடகப் பக்கங்களையும் பின்தொடர்ந்து, இறுதியாக ரொனால்ட் பதுங்கியிருந்த இடத்தை அடைந்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
ரொனால்ட் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் போதைப்பொருள் கடத்தலின் மூலம் 860.2 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது மனைவியும் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...