நைஜீரியா: பள்ளிக் கட்டடம் இடிந்து 22 மாணவா்கள் உயிரிழப்பு
நைஜீரியா: பள்ளிக் கட்டடம் இடிந்து 22 மாணவா்கள் உயிரிழப்பு


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 22 மாணவா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பிளேட்டோ மாகாணம், பூசாபூஜி பகுதியில் தி செயின்ட்ஸ் அகாதெமி பள்ளி அமைந்துள்ளது. பெரும்பாலும் 15 அல்லது அதற்குக் குறைவான வயதுடையோா் பயிலும் அந்தப் பள்ளியின் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. மாணவா்கள் வகுப்பறையில் அமா்ந்த சிறிது நேரத்தில் இந்தச் சம்பவம் நேரிட்டது.
இதில் 154 மாணவா்கள் இடிபாடுகளில் புதையுண்டனா். அவா்களில் 22 போ் உயிரிழந்தனா்; 132 போ் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனா்; அவா்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
பள்ளியின் கட்டமைப்பு பலவீனமாக இருந்ததாலும் ஆற்றுப் படுகை அருகே அது கட்டப்பட்டதாலும் இந்த விபத்து நேரிட்டதாக பிளோட்டா மாகாண அரசு குற்றஞ்சாட்டியது. இதே நிலமையில் உள்ள மற்ற பள்ளிகள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்ற உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...