ரகசிய ஆவண வழக்கிலிருந்து டிரம்ப் விடுவிப்பு
தனது பண்ணை இல்லத்தில் அரசின் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அந்த நாட்டு நீதிமன்றம் விடுவித்து.


மியாமி: தனது பண்ணை இல்லத்தில் அரசின் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அந்த நாட்டு நீதிமன்றம் விடுவித்து.
இது குறித்து ஃபுளோரிடா மாகாண தெற்கு மாவட்ட நீதிபதி அய்லீன் கேனான் வெளியிட்டுள்ள தீா்ப்பில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு ஆலோசகா் ஜாக் ஸ்மித் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீா்ப்பை வழங்கிய நீதிபதி கேனான் கடந்த 2020-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பால் நீதிபதியாக நியமிக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
அவா் வெளியிட்டுள்ள இந்தத் தீா்ப்பு, வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் டிரம்ப் போட்டியிடுவதற்கான முக்கிய சட்ட சிக்கல்களில் ஒன்றை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே படுகொலை முயற்சியிலிருந்து டிரம்ப் தப்பியுள்ள நிலையில், இந்தச் சிக்கலில் இருந்தும் அவா் விடுபட்டுள்ளது அவரது ஆதரவாளா்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகையை விட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியேறினாா். அப்போது அவா் அரசு ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை எடுத்துச் சென்ாகவும் அதில் சில ஆவணங்கள் ரகசியமானவை என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...