டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் உள்பட 5 பேர் பலி!

பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2024, 3:57 pm

DIN

பாகிஸ்தானில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் திகான் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது நேற்று (ஜூலை 15) அதிகாலையில் சுமார் 10 பேர் கொண்ட பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்தவுடன் பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்து, பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் குழுவில் இருந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இருப்பினும், சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த 5 ஊழியர்கள் மற்றும் 2 பாதுகாப்புப் படை வீரர்களும் தாக்குதலின்போது உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் நடந்த கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதல்வர் அலி அமீன் கந்தாபூர், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.