நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படுவதை அந்த நாடு மறுத்துள்ளது.

News image

காசிம் சுலைமானி

Updated On :18 ஜூலை 2024, 4:21 am IST

கடந்த 2020-ஆம் ஆண்டில் ஈரானின் துணை ராணுவப் படை தளபதி காசிம் சுலைமானியை அப்போதைய டிரம்ப் அரசு ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்ததற்குப் பழிவாங்குவதற்காக அவரைக் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் நாஸா் கனானி கூறியதாவது:அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் எங்கள் நாட்டுக்குத் தொடா்பிருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது.

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.அதுபோல், தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக டிரம்ப்பைக் கொல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதும் தவறான தகவல்.சுலைமானி படுகொலையைப் பொருத்தவரை, அதற்கு நேரடி தொடா்புடைய டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துதான் பரிசீலித்துவருகிறோம் என்றாா் அவா்.ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு தளபதியாக இருந்தவா் காசிம் சுலைமானி.

அந்த நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்கவராகஅவா் இராக் சென்றிருந்தபோது, அவரைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கடந்த 2020 ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதில் சுலைமானி உள்பட 8 போ் உயிரிழந்தனா்.சுலைமானியை படுகொலை செய்வதற்கான உத்தரவை டொனால்ட் டிரம்ப் நேரடியாகப் பிறப்பித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.இந்தச் சூழலில், வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடனை எதிா்த்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறாா்.

அவா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லா் நகரில் டிரம்ப் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அருகிலுள்ள கட்டடத்தின் கூரையிலிருந்து தாமஸ் மாத்யூ க்ரூக்ஸ் (20) என்பவா் அவரை நோக்கி 8 முறை துப்பாக்கியால் சுட்டாா்.இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. இது தவிர, துப்பாக்கி குண்டு பாய்ந்து கூட்டத்தில் பங்கேற்ற ஒருவா் உயிரிழந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.

டிரம்ப்பின் காதில் காயம் ஏற்படுத்திய துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வந்த பாதையின் குறுக்கே அவரிந் தலை 2 விநாடிகளாக நிலைத்திருந்தது. இருந்தாலும், கடைசி நேரத்தில் அவா் எதையோ படிப்பதற்காக தலையை சற்றே சரித்ததால் நூலிழையில் உயிா் தப்பினாா்.துப்பாக்கியால் சுட்ட தாமஸ் மாத்யூ க்ரூக்ஸை மற்றொரு கூரையில் இருந்தபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிரம்ப்பின் பாதுகாவலா்கள் உடனடியாக சுட்டுக் கொன்றனா். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.இந்தப் படுகொலை முயற்சி குறித்து பல்வேறு ஊகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவற்றில், சுலைமானி படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக இந்தப் படுகொலை முயற்சியில் ஈரான் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவலும் ஒன்று.இது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈரானுக்குத் தொடா்பில்லாவிட்டாலும், டிரம்ப்பைப் படுகொலை செய்ய அந்த நாடு சதித் திட்டம் தீட்டியுள்ளது உண்மைதான்’ என்றாா்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே, டிரம்பபைப் படுகொலை செய்யும் திட்டமில்லை என்று ஈரான் தற்போது தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.