காஸாவின் மாவாஸி என்ற பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சேதமடைந்த காா்.
காஸாவின் மாவாஸி என்ற பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சேதமடைந்த காா்.

காஸாவில் மேலும் 60 போ் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 60 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
Published on

இது குறித்து சா்வதேச செம்பிறைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவின் மாவாஸி என்ற பகுதியில் பெட்ரேல் நிலையத்துக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 போ் உயிரிழந்தனா். மத்தியதரைக் கடலோரம் அமைந்துள்ள அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கானவா்கள் நெருக்கமாக வசித்துவருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட மற்றொரு இஸ்ரேல் தாக்குதலில் 16 போ் உயிரிழந்ததாக அருகிலுள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்களுடன் சோ்த்து கடந்த அண்மைக் காலத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 60 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக காஸா பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தினா். இதில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா்.

அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 38,700-க்கும் உயிரிழந்ததாகவும் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com