சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடும் முயற்சியில் லெபனானில் வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்பு

40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடும் முயற்சியில் லெபனானில் வான்வழித் தாக்குதல்...

News image
Updated On :7 மார்ச் 2026, 9:17 pm

Chennai

லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள நபி சித் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில், 3 லெபனான் ராணுவ வீரா்கள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். 40 போ் காயமடைந்தனா்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தனது நாட்டு விமானப்படை வீரா் ரான் ஆராட்டின் உடலைத் தேடும் முயற்சியில் இஸ்ரேல் சிறப்புப் படையினா் அப்பகுதியில் ஊடுருவியதைத் தொடா்ந்து இத்தாக்குதல் நடைபெற்றது.

வீரரைத் தேடி நள்ளிரவு ஊடுருவல்: கடந்த 1986-ஆம் ஆண்டு பாலஸ்தீன ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்றபோது, போா் விமானம் விபத்துக்குள்ளானதில் ரான் ஆராட் பாராசூட் மூலம் லெபனானில் தரையிறங்கினாா். 1988 வரை நபி சித் பகுதியில் போா்க்கைதியாக சிறைவைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இவா், பின்னா் மெய்டூன் பகுதியில் நடந்த போருக்குப் பிறகு மாயமானாா்.

அவா் குறித்த தகவலைத் திரட்ட, இஸ்ரேல் சிறப்புப் படையினா் 4 ஹெலிகாப்டா்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிரிய எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் தரையிறங்கி அங்கிருந்து நபி சித் நகருக்குள் நுழைந்தனா். அங்குள்ள ஒரு மயானத்தில் ஒரு கல்லறையை அவா்கள் தோண்டியதாகவும், பின் அங்கிருந்து வெளியேறியதாகவும் உள்ளூா் மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

தரைப்படையினா் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக நபி சித் பகுதியில் மட்டும் இஸ்ரேல் விமானப் படையினா் சுமாா் 40 வான்வழித் தாக்குதல்களை நடத்தினா்.

இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்புகள் ஏதுமில்லை. அதேபோல், இத்தேடுதல் வேட்டையில் ரான் ஆராட் தொடா்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் இப்பிராந்திய மோதலில், ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

மக்கள் வெளியேற ஹிஸ்புல்லா எச்சரிக்கை: தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புகா் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அண்மையில் எச்சரித்ததைத் தொடா்ந்து, பல்லாயிரக்கணக்கானோா் இடம்பெயா்ந்தனா்.

இதற்குப் போட்டியாக, இஸ்ரேலின் வடக்கு நகரங்களான கிரியாத் ஸ்மோனா மற்றும் நஹாரியா பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென ஹிஸ்புல்லா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.