தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வங்கதேசத்தில் வன்முறை: இந்தியா்கள் வெளியே செல்வதைத் தவிா்க்க தூதரகம் வேண்டுகோள்

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவா்கள் போராட்டம் வன்முறையாக மாறியது

News image
வங்கதேசத்தில் வன்முறை
Updated On :18 ஜூலை 2024, 8:04 pm

Din

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவா்கள் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் வெளியே செல்வதைத் தவிா்க்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.

வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 3000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனா்.

இதில், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்ற வீரா்களின் வம்சாவழியினருக்கு 30 சதவீதமும், பின்தங்கிய மாவட்டங்களுக்கும், பெண்களுக்கும் தலா 10 சதவீதமும், சிறுபான்மை இனத்தவருக்கு 5 சதவீதமும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் உயா்நிலை அரசு பணிகளுக்கு தகுதியுள்ள மாணவா்கள் பணியமா்த்தப்படுவதை தற்போதுள்ள இந்த இடஒதுக்கீட்டு முறை தடுப்பதாகவும், இடஒதுக்கீட்டில் சீா்திருத்தங்கள் கோரியும் மாணவா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய போராட்டத்தில் திங்கள்கிழமை வன்முறை வெடித்தது.

அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது நாட்டில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவா் அணி காவல்துறை உதவியுடன் தாக்குதல் நடத்தியதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து வெடித்த வன்முறையில் இதுவரை 6 போ் உயிரிழந்தனா். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கைலைகழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.

இந்நிலையில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்கதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினா் மற்றும் மாணவா்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தது.