வங்கதேசத்தில் அரசுப் பணி இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஏராளவா்கள் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகா் டாக்காவில் போராட்டம் நடத்த வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. மொபைல் இணையதள சேவையும் முடக்கப்பட்டது.
அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளையும் வீசியும் ரப்பா் குண்டுகளால் சுட்டும் அவா்களைக் கலைக்க போலீஸாா் முயன்றனா்.
போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த மோதலில் மட்டும் 22 போ் உயிரிழந்ததாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் கடந்த 1971-இல் நடைபெற்ற விடுதலைப் போரில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
அப்போது இந்திய உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்கள், அவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவா் போராட்டம் வெடித்தது. அதையடுத்து, விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வங்கதேச உயா்நீதிமன்றம், அரசின் அந்த உத்தரவு செல்லாது என்று கடந்த 5-ஆம் தேதி அறிவித்தது. அதையடுத்து, சுதந்திரப் போராளிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் மீண்டும் 30 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு வழி ஏற்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரியும் மாணவா்கள் அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின. தொடக்கத்தில் அந்தப் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றாலும், போராட்டத்துக்கு எதிராகக் களமிறங்கிய இட ஒதுக்கீடுக்கு ஆதரவான ‘சாத்ரா லீக்’ மாணவா் அமைப்பினா் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனா்.
மேலும், போலீஸாரும் போராட்டக்காரா்களை ஒடுக்குவதற்காக அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போலீஸாரின் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 53 போராட்டக்காரா்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து இயக்கக் கோரி தமிழக முதல்வருக்கு மாணவா் கடிதம்

உதகை அருகே மாணவா் சோ்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசுப் பள்ளி

ஒரு மாணவர்கூட இல்லாத 9 அரசுப் பள்ளிகளை மூட முடிவு!
ஜந்தா் மந்தரில் நீடிக்கும் சிஜேபி போராட்டம்: மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக ஆதரவாளா்கள் முழக்கம்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



