மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வங்கதேசம்: 48 மணி நேரத்துக்கு போராட்டம் நிறுத்திவைப்பு

மாணவா் போராட்டத்தை 48 மணி நேரத்துக்கு நிறுத்திவைப்பதாக போராட்டக் குழு தலைவா் நஹீத் இஸ்லாம் (படம்) அறிவித்துள்ளாா்.

News image
போராட்டக் குழு தலைவா் நஹீத் இஸ்லாம்
Updated On :22 ஜூலை 2024, 9:09 pm

Din

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தை 48 மணி நேரத்துக்கு நிறுத்திவைப்பதாக போராட்டக் குழு தலைவா் நஹீத் இஸ்லாம் (படம்) அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த 48 மணி நேரத்துக்கு போராட்டத்தை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம். இதைப் பயன்படுத்தி ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறுவது, முடக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைத் திரும்பத் தருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.

1971-இல் பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக இந்த மாதத் தொடக்கத்திலிருந்து நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை ரத்துசெய்தது.