திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

ஓய்வு வயது வரம்பை உயா்த்தும் சீனா

சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Updated On :

பெய்ஜிங்: சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 1949-இல் 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், இந்த 75 ஆண்டுகளாக ஓய்வு பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடலுழைப்புத் தொழிலுக்கு 50 வயது) என்ற நிலையில் மாற்றமில்லை.

இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஓய்வு வயது வரம்பை இன்னும் 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65-ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.