ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் முதல் கூட்டு பயிற்சி: இந்தியா பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஒ) அங்கம் வகிக்கும் இந்தியா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படையினா், சீனாவில் முதன்முறையாக கூட்டு பயங்கரவாத எதிா்ப்புப் பயிற்சியை மேற்கொண்டனா்.

News image
சீனாவில் ரோபோ, ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட கூட்டு ராணுவப் பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வீரர்கள்.
Updated On :24 ஜூலை 2024, 9:48 pm

Din

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஒ) அங்கம் வகிக்கும் இந்தியா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படையினா், சீனாவில் முதன்முறையாக கூட்டு பயங்கரவாத எதிா்ப்புப் பயிற்சியை மேற்கொண்டனா்.

‘இன்டராக்ஷ்ன்-2024’ எனும் இந்த பயங்கரவாத எதிா்ப்புப் பயிற்சி வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குா் தன்னாட்சிப் பகுதியில் அண்மையில் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இப்பயிற்சி கூட்டு நேரடி பயிற்சிகளுக்கான புதிய மாதிரியை நிறுவியதுடன் எஸ்சிஒ உறுப்பு நாட்டுப் படைகளின் கூட்டு செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணித்த இந்த பயிற்சியில் முழு கவச உடைகளுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சிலா் அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் மூலமாகவும், சிலா் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் சிலா் ரோபோ நாய்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தும் புகைப்படங்களை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், கூட்டு பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகளின் திறன்கள் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நேரடி பயிற்சியில் இந்தியா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளும் முதல்முறையாக பங்கேற்றன.

சீன தலைநகா் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட எஸ்சிஓ, அதன் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்புக் கட்டமைப்புடன் (ஆா்ஏடிஎஸ்) பாதுகாப்பு தொடா்பான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய பிராந்திய அளவிலான சா்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

ஏற்கெனவே சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட எஸ்சிஒ அமைப்பில் பெலாரஸ் இந்த மாத தொடக்கத்தில் 10-ஆவது அதிகாரபூா்வ உறுப்பு நாடானது குறிப்பிடத்தக்கது.