அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கமலா ஹாரிஸுக்கு பாரக் ஒபாமா ஆதரவு!

அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

News image
முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுடன் கமலா ஹாரிஸ்- படம் | எக்ஸ்
Updated On :26 ஜூலை 2024, 10:24 am

DIN

அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அதிகாரபூர்வமாக ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆதரவளிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அவர் கமலா ஹாரிஸை ஆதரிப்பாரா.. இல்லையா? என்று ஊடகத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாரக் ஒபாமா, அவரின் மனைவி மிச்செல் ஒபாமா இருவரும் அவருக்கு தொலைபேசி மூலம் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதுகுறித்து பாரக் ஒபாமா தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்த வார தொடக்கத்தில் மிச்செலும், நானும் எங்களது நண்பரான கமலா ஹாரிஸை அழைத்தோம். அவர் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்றும், அவருக்கு எங்கள் முழு ஆதரவு இருப்பதாகவும் அவரிடம் கூறினோம். இந்த முக்கியமான தருணத்தில் வருகிற நவம்பரில் அவர் கண்டிப்பாக வெற்றிபெறுவார் என்று நம்புகிறோம். நீங்களும் எங்களுடன் இணைந்து அவருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடன் | கமலா ஹாரிஸ் | பாரக் ஒபாமா

ஜோ பைடன் | கமலா ஹாரிஸ் | பாரக் ஒபாமா

மேலும், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கமலாவை நினைத்து நான் பெருமை அடைகிறேன். நானும், பாரக்கும் அவரை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஆதரிப்பதில் மிகவும் உற்சாகமாக உள்ளோம். அவரின் நேர்மறை சிந்தனை, நகைச்சுவை உணர்வு ஆகியவை நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் என்று நம்புகிறோம். மேலும், உங்கள் ஆதரவையும் நாங்கள் பெற்றுள்ளோம் கமலா ஹாரிஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, 100-க்கும் மேற்பட்ட ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் கமலா ஹாரிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது பாரக் ஒபாமா வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஜோ பைடனின் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேறதைப் பாராட்டினார். ஆனால், கமலா ஹாரிஸுக்கு ஒப்புதல் அளிப்பதை பற்றி எதுவும் கூறவில்லை.

ஆனால், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஏற்கனவே பெரும்பான்மையான ஜனநாயக கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் அதிகாரபூர்வ வேட்பாளராவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகவும், அமெரிக்க செனட்டராகவும் பின்னர் துணை அதிபராகவும் இருந்ததை பாரக் ஒபாமா - மிச்செல் தம்பதியினர் மேற்கோள் காட்டினர்.

அவரிடம் தொலைநோக்குப் பார்வை, குணநலன், வலிமை உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறவும், அமெரிக்க மக்களுக்கு வழங்கவும் கமலா ஹாரிஸிடம் என்ன இருக்கிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.