இலங்கையில் வெள்ளம், மண்சரிவுக்கு 10 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை!

இலங்கையில் திடீர் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இலங்கையில் வெள்ளம், மண்சரிவுக்கு 10 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை!

பருவக்காற்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் திடீர் வெள்ளம், மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்குப் பள்ளிகளுக்கு இன்று(ஜூன்3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் முன்னெச்சரிக்கையாக பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பு, ரத்தினபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆறு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வெள்ளம், மண்சரிவுக்கு 10 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை!
கருத்துக் கணிப்பு முற்றிலும் மாறுபடும்: சோனியா

நாட்டின் 20 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய நதிகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வேறு இடத்திற்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் மையங்களுக்கு மாற்றப்பட்டனர், 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை வழங்கவும் கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகவும், வானிலை ஆய்வுமையத்தின் முன்னறிவிப்பின் படி இன்று(ஜூன் 3) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com