வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அக்.7 தாக்குதலின்போது ஹமாஸ் பிடித்துச் சென்ற 4 பிணைக் கைதிகள் மீட்பு

அக்.7 தாக்குதலின்போது ஹமாஸ் பிடித்துச் சென்ற 4 பிணைக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜூன் 2024, 12:42 pm

DIN

ஜெருசலேம்: இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நான்கு பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது.

நோவா அர்கமாணி (25), அல்மோக் (21), ஆன்ட்ரே கோஸ்லோவ் (27), ஷ்லோமி (40) ஆகிய நான்கு பேரும், பகல் நேரத்தில் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையின்போது மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

நுஜெய்ரத் அருகே இருவேறு இடங்களிலிருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த காஸா பயங்கரவாதிகள் பலரைக் கொன்று, 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதே, காஸா மீது இஸ்ரேல் போரைத் தொடங்க காரணமாக அமைந்திருந்தது.

நவம்பர் மாதம், காஸா மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில், பிணைக் கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

இன்னமும் 130 பிணைக் கைதிகள் மீட்கப்பட வேண்டும் என்றும், அதில் கால்வாசி பேர் இறந்திருக்கலாம் என்றும், மற்றவர்களை பத்திரமாக மீட்டு நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.