19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

ஹஜ் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள்: சௌதி அரசு

அராஃபத் வரை ரப்பர்களால் பாதசாரிகள் நடந்து செல்ல பாதை போடப்பட்டுள்ளது.

அராஃபத் மலையில் ஹஜ் பக்தர்கள் - படம் | ஏபி

Updated On :

ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை(ஜூன் 14) தொடங்கியது. இதற்காக 15 லட்சம் பக்தர்கள் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர். ஹஜ் யாத்திரை மூலம், இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் ரஃபா எல்லை மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல முடியவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலை ஒட்டியுள்ள மேற்கு கரையிலிருந்து 4,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், காஸாவில் நடைபெறும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோரும் ஹஜ் யாத்திரை மூலம் மெக்காவுக்கு வருகை தர, சௌதி மன்னர் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹஜ் பயணத்தின் நிறைவாக பக்தர்கள் 230 அடி உயர புனித அராஃபத் மலைக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

சௌதியில் இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அங்கு வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக பதிவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஹஜ் யாத்திரை செல்வோரில் பாதிக்கும் மேற்பட்டோர் வயது முதிர்ந்த பக்தர்களாவர்.இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சௌதி அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவாக, அதீத வெப்பத்தால் கால்களில் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, மினாவிலிருந்து அராஃபத் வரையிலான பாதையில் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர்களால் பாதசாரிகள் நடந்து செல்ல பாதை போடப்பட்டுள்ளது.

மேலும், வெப்பத்தால் ஏற்படும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டோருக்கென மெக்காவில் உள்ள அல் நூர் மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.