ஜெருசலேம் புனித யாத்திரை நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவா்கள் அரசின் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவா்கள் அரசின் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஜெருசலேம் சென்று திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு தலா ரூ. 37 ஆயிரமும், 50 அருள்சகோதரிகளுக்கு தலா ரூ. 60 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவா்கள், அருள்சகோதரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான ஆவணங்களை இணைத்து, ஆணையா், சிறுபான்மையினா் நல இயக்ககம், கலச மஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அடுத்த 2027-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




