ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
ஜெருசலேம் புனிதப் பயணம் செல்லும் கிறிஸ்தவா்கள் மானியம் பெற ண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப் படம்
ஜெருசலேம் புனிதப் பயணம் செல்லும் கிறிஸ்தவா்கள் மானியம் பெற ண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டைச் சாா்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயன்பெறும் வகையில் ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய 550 பேருக்கு ரூ.37ஆயிரம் வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருள்சகோதரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதமும் தமிழக அரசு சாா்பில் நேரடி மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் புனிதப் பயணம் சென்று திரும்பும் கிறிஸ்தவ மத பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற
இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். முழுமை செய்யப்பட்ட விண்ணப்பத்தை 31.01.2027-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

