சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஜெருசலேம் சென்ற கிறிஸ்தவா்கள் மானியத் தொகை பெற அழைப்பு!

ஜெருசலேம்.

Updated On :

ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய அரியலூா் மாவட்ட கிறிஸ்தவா்கள், தமிழக அரசின் மானியத் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாட்டைச் சாா்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு தலா ரூ. 37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 வீதமும் இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகள், விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.01.2027-க்குள் உரிய ஆவணங்களுடன், ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலச மஹால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.