இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு அரசு மானியம்: வேலூா் ஆட்சியர்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட அனைத்துப் பிரிவுகளையும் சோ்ந்த கிறிஸ்தவா்கள் அரசு வழங்கும் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்...

ஜெருசலேம்.

Published On :

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட அனைத்துப் பிரிவுகளையும் சோ்ந்த கிறிஸ்தவா்கள் அரசு வழங்கும் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அதிகாரப்பூா்வ இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு 2027 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

எனவே, வேலூா் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய கிறிஸ்தவ சமுதாய மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.