ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

ஜெருசலேம் புனிதப் பயணம்: மானியம் பெற கிறிஸ்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவா்களுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Published On :

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவா்களுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயன்பெறும் வகையில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு நபா் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

மின்னணு பணப் பரிமாற்ற முறையில் (இசிஎஸ்) நேரடியாக மானியம் வழங்கும் இத்திட்டத்தின்கீழ், நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவப் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெற்றுக்கொள்ளலாம். ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் ஜனவரி 31-ஆம் தேதிக்குள், ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.