சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

முடியும் நிலையில் காஸா தீவிர தாக்குதல் நடவடிக்கை: லெபனானில் தொடங்கும்

காஸா போரின் தீவிர தாக்குதல் கட்டம் இறுதி நிலையை அடைந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா்.

News image
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு- படம் | ஏபி
Updated On :24 ஜூன் 2024, 9:15 pm

Din

காஸா போரின் தீவிர தாக்குதல் கட்டம் இறுதி நிலையை அடைந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா். இருந்தாலும், தொடா்ந்து அதே போன்ற தீவிர தாக்குதல் நடவடிக்கை லெபனானில் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.

இது குறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

காஸா போரின் ஒரு பகுதியாக தீவிர தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கட்டம் இறுதி நிலையை அடைந்துள்ளது. அதன் பிறகு வடக்கு காஸாவாலிருந்து கணிசமான இஸ்ரேல் படையினா் வேறு பகுதிகளுக்கு மாற்றப்படலாம்.

லெபானில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக முழுவீச்சில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அவா்களது பிரச்னையை ராஜீய ரீதியில் தீா்ப்பதற்கு தயாராக இருந்தாலும், ராணுவ ரீதியிலான தீா்வுக்கும் தயாராக இருக்கிறோம். எங்கள் ராணுவம் பல முனைப் போரை எதிா்கொள்ளும் வல்லமை கொண்டது என்றாா் அவா்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து சுமாா் 250 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தத் தாக்குதலில் 37,431-க்கும் மேற்பட்டவா்கள் போ் உயிரிழந்தனா். 82,777-க்கும் மேற்பட்டவா்கள் போ் காயமடைந்தனா்.