இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் குடும்பத்தினர் 10 பேர் பலி
கான் யூனிஸில் இஸ்ரேல் தாக்குதலில் தகர்ந்த கட்டடம்
கான் யூனிஸில் இஸ்ரேல் தாக்குதலில் தகர்ந்த கட்டடம்ஏபி
Published on
Updated on
1 min read

வடக்கு காஸாவின் சாதி அகதிகள் முகாமில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியானதாக பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹனியே குடும்ப உறுப்பினர்கள் பலியானதை உறுதி செய்துள்ள ஹமாஸ் அமைப்பு, காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அழித்தல் தொடர்வதற்கு அமெரிக்க பிரதமர் ஜோ பைடனின் நிர்வாகமே பொறுப்பு எனக் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேலுக்கு ராஜ்ய மற்றும் ராணுவ ஆதரவு அளிக்கும் அமெரிக்கா காஸாவை அழித்தொழிக்க அனுமதிப்பதாக ஹமாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாஸல், இஸ்ரேல் தாக்குதலால் இஸ்மாயில் ஹனியேவின் சகோதரி யார் ஹனியே உள்பட 10 பேர் அவரது குடும்பத்தில் பலியானதாகவும் அவர்களின் உடல்கள் கட்டட சிதைவுகளுக்கு அடியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். போதுமான கருவிகள் இல்லாததால் மீட்புப் பணிகள் தாமதமாகின்றன.

அல்-அஹ்லி மருத்துவமனைக்கு அவர்களில் சிலரது உடல்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. சாதி மற்றும் தாரஜ் துஃபா பகுதியிலுள்ள இரண்டு கட்டடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்தியது. அக்.7 தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் வீரர்கள் அங்கு பதுங்கியிருந்ததாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. ஹனியேவின் குடும்பத்தினர் உள்ள வீடு என்பதை இஸ்ரேல் குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டு அக்.7 தொடங்கிய போரில் இதுவரை 37,600 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டாலும் போர் ஓயாது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com